ஜெனீவா,
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் மாகாணத்தில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 8-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஜெனீவாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் ஜெப்ரேயிசஸ், கொரோனா வைரஸ் மனித குலத்திற்கு எதிரியாக உள்ளது. முன்னெப்போதும் இல்லாத அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் விளங்குகிறது. சந்தேகப்படும் ஒவ்வொரு நபரையும் பரிசோதிக்க வேண்டும். விளையாட்டு நிகழ்ச்சிகள், கச்சேரிகள் உள்பட மக்கள் கூடுவதை தவிர்க்க நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.